

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் திமுககூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். பாளையங்கோட்டை கேடிசிநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையோரத்தில் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். அதில்பெண் ஒருவர் கையில் வேப்பிலையுடன் திடீரென சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரூபி மனோகரன் அந்த பெண்ணிடம் ஆசிபெற்று, அவர் வழங்கிய வேப்பிலை, எலுமிச்சையை வாங்கிச் சென்றார்.