இந்திய ஜனநாயக கட்சியின் : 3 வேட்பாளர்கள் மாற்றம் :

இந்திய ஜனநாயக கட்சியின் : 3 வேட்பாளர்கள் மாற்றம்  :
Updated on
1 min read

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் களில் 3 பேர் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அணைக்கட்டு, விருத்தாச்சலம், கெங்க வல்லி (தனி) தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அணைக்கட்டு-ராஜசேகர், விருத்தாச்சலம்-ஆர்.பார்த்தசாரதி, கெங்கவல்லி (தனி)-கே.பெரியசாமி ஆகியோரை புதிய வேட்பாளராக நியமித்துள்ளோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் ரவிபச்சமுத்து கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in