

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
2021 சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் ஜி.வி.மார்க்கண்டேயன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று (மார்ச் 15) பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து முத்துச்சாமிபுரம், மணியகாரன்பட்டி, சிவலார்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் புதூர் பேரூராட்சி பகுதியில் பிரச்சாரம் செய்திட இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.