தேர்தல் கண்காணிப்புக் குழுவை கண்டித்து - பெரம்பலூரில் சாலை மறியல் :

தேர்தல் கண்காணிப்புக் குழுவை கண்டித்து -  பெரம்பலூரில் சாலை மறியல்  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவனர் சுப்ரமணியன் இல்லத் திருமணம் இன்று (மார்ச் 15) சிறுவாச்சூரில் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்நிகழ்ச்சிக்கு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அணிவிப்பதற்காக, பெரம்பலூரி லிருந்து சிறுவாச்சூருக்கு நேற்று மாலை சுப்ரமணியன் 24 துண்டு களை வாங்கிச் சென்றார்.

அப்போது, பெரம்பலூர் துறை மங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், அந்த துண்டுகளை பறிமுதல் செய்து வாக்காளர்களுக்கு கொண்டு சென்றதாக எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நரிக்குறவர்கள் தேர்தல் கண் காணிப்புக் குழுவினரின் செயலைக் கண்டித்து துறைமங் கலம் மூன்று சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், பெரம்பலூர் போலீ ஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, திருமணத்துக்கு கொண்டு செல்லப்பட்டவை என திருத்தம் செய்து வழங்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in