

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட 2,886 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்தி ரங்களை அனுப்பிவைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த தொகுதிக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 423 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 423 கட்டுப்பாட்டுக் கருவிகள், 462 விவிபாட் இயந்திரங்கள் அனுப்பிவைக் கப்பட்டன. இதேபோல, கும்ப கோணம் தொகுதியில் உள்ள 378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 450 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 450 கட்டுப்பாட்டுக் கருவிகள், 492 விவிபாட் இயந்திரங்களும், பாபநாசம் தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடி மையங்களுக்கு 431 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 431 கட்டுப்பாட்டுக் கருவிகள், 471 விவிபாட் இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
திருவையாறு தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு 459 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 459 கட்டுப்பாட்டுக் கருவி கள், 501 விவிபாட் இயந்திரங்களும், தஞ்சாவூர் தொகுதியில் உள்ள 406 வாக்குச்சாவடி மையங்களுக்கு 484 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 484 கட்டுப்பாட்டுக் கருவிகள், 528 விவிபாட் இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரத்தநாடு தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு 405 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 405 கட்டுப்பாட்டுக் கருவிகள், 442 விவிபாட் இயந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங் களுக்கு 411 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், 411 கட்டுப்பாட்டு கருவிகள், 449 விவிபாட் இயந்திரங்களும், பேராவூரணி தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 375 கட்டுப்பாட்டுக் கருவிகள், 410 விவிபாட் இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
இதன்படி, மொத்தமுள்ள 2,886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,438 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,438 கட்டுப்பாட்டுக் கருவிகள், 3,755 விவிபாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந் திரங்களுக்கான 3,900 பேட்டரிகள், விவிபாட் இயந்திரங்களுக்கான 4,000 பேட்டரிகள் அனுப்பிவைக் கப்பட்டன.