பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவதை கைவிட்ட கட்சிகள் : விக்கிரமராஜா குற்றச்சாட்டு

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவதை கைவிட்ட கட்சிகள்  :  விக்கிரமராஜா குற்றச்சாட்டு
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர் வுக்கு எதிராக போராடுவதை அரசியல் கட்சிகள் கைவிட்டுள்ளன என வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

உள்ளாட்சி கடைகளின் வாடகை அபரிமிதமாக அதிகரித்துவிட்டது. மாநிலம் முழுவதும் பல நகராட்சிகளில் 2 மடங்கு முதல் 10 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை அமல்படுத்த வர்த்தக சங்கப் பிரமுகர்கள், அதிகாரிகள் அடங்கிய கமிட்டியை அமைக்க வேண்டும்.

வணிகர் நல வாரிய உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை புதிதாக அமையவுள்ள அரசு கருத்தில்கொள்ள வேண் டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடு வதை அரசியல் கட்சிகள் கைவிட் டுள்ளன. சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதத்துக்கு 3 முறை விலையேற்றம் கண்டுள்ளது. பாமாயில் கடந்தாண்டு லிட்டர் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.120 என விலை உயர்ந்துள்ளது. சுங்கக் கட்டணமும் உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு உரிய அழுத்தத்தை தருவதற்கு தேவை ஏற்படும் என்றால், கடையடைப்பு நடத்த வும் தயாராக இருக்கிறோம்.

அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்துக்கு வியாபாரி கள் பொறுப்பல்ல என்பதை புரியவைக்கவும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு பொறுப்பேற்று, விலைவாசியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in