

திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முருகேசபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி வளர்மதி (32). இத்தம்பதிக்கு ஏற்கெனவே பவானிஷா (6) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வளர்மதி மீண்டும் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு வயிற்று வலி ஏற்பட் டதை தொடர்ந்து நேற்று முன் தினம் பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியில் இல்லையாம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவருக்கு சுகப் பிரசவமாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. உடன டியாக அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப் பையை அகற்றியுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வளர்மதி தூத் துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித் துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் உறவினர்கள் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.கோட்டாட்சியர் தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத் தினார். கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.