திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி குழந்தை உட்பட இருவர் மரணம் :

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி  குழந்தை உட்பட இருவர் மரணம் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கார் மரத்தில் மோதியதில் 2 வயது குழந்தை உட்பட இருவர் மரணம் அடைந்தனர்.

தேனி மாவட்டம், வடுகபட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் அ வரது உறவினர்கள் நேற்று காரில் காரைக் குடிக்குச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால், கார் நிலை தடுமாறி பனை மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் 3 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

கார் கதவைத் திறக்க முடியாததால், அனைவரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து திருப்பத்தூர் தீய ணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்சில் திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சண்முகசுந்தரம் மனைவி முத்துலட்சுமி (45), பார்த்திபன் மகன் சுபிக்சா (2) ஆகிய இருவரும் சிகிச் சை பலனின்றி இறந்தனர்.

இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in