திருவண்ணாமலை மாவட்டத்தில் - 55,737 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை :

தி.மலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தி.மலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 55,737 பேருக்கு வாக்காளர் அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 25,289 ஆண்கள் மற்றும் 30,426 பெண்கள் என மொத்தம் 55,737 புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு இணையதளம் மூலம் பதி விறக்கம் செய்யப்பட்ட வாக் காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. 2,885 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 1,297 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை வேங்கிக் கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். சிறப்பு முகாம் இன்று நிறைவு பெறுகிறது.

முன்னதாக, பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in