கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை - வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :

கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டயாமாக அணிவது குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அருகில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டயாமாக அணிவது குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அருகில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை பரவ வாய்ப்புள்ளதால், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராத தொகையை உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சுகாதார துறையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ரூ.300, காரில் செல்பவர்களுக்கு ரூ.1000 என அபராதத் தொகையை உயர்த்தி வசூலிக்க வேண்டும். அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மூலமாகவும் கரோனா பரவ வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும்.

வியாபார நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும். உணவகங்கள் ஊழியர்கள் மூலம் கரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் அவர்களை கண்காணித்து தடுப்பூசி போட வேண்டும்.

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் மூலம் கரோனா பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர்கண்காணிக்க வேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலமும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in