

அதன்படி, உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை வட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பணப்பரிவர்த்தனைகள், நகை ஆபரணங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பான தகவல்களை 04252230630, 9445000278, 9994278400. ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்" என்றனர்.