காந்திவேடம் அணிந்து சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் :

நாமக்கல் தொகுதியில் போட்டியிட சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் டி.ரமேஷ்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிட சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் டி.ரமேஷ்.
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காந்தி வேடமிட்டபடி சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதன்படி ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், குமாரபாளையம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இதில், நாமக்கல் தொகுதியில் போட்டியிட நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி பிரமுகர் டி.ரமேஷ் (40) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சைக்கிளில் வந்து மனு தாக்கல் செய்தார். அவருடன் தேர்தல் விதிமுறைப்படி இருவர் மட்டுமே தேர்தல் அலுவலர் அறைக்குள்அனுமதிக்கப்பட்டனர். பிற வாகனங்கள் அலுவலகத்தில் இருந்து 100 அடி தூரத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in