

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மத்திய செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தலுக்காக 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வசதிகளையும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்ய மத்திய தேர்தல் ஆணையத்தால், பொதுப்பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதி செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் பணியை பார்வையிட்டார். வேட்புமனு தாக்கலின்போது செய்யப்பட்டுள்ள வசதிகள், கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். ஈரோடுகிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான, இளங்கோவன் வேட்புமனு தாக்கலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அரூப் சட்டர்ஜியிடம் விளக்கமளித்தார்.