

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் வருகை, புறப்பாடு மாற்றம் செய்யப்பட்டு புதிய கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு நாளை முதல் வரும் 19-ம் தேதி வரையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நேரடியாக செல்லும் மின்சார ரயில் சேவை இருக்காது. ரயில் சேவை பயணிகளின் சேவை சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பயணிகள் பாதிக்காத வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.