முதல்கட்ட பட்டியல் வெளியீடு - புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு : எஸ்யுசிஐ கம்யூ.க்கு அமமுகவில் 2 இடங்கள்

முதல்கட்ட பட்டியல் வெளியீடு -  புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு :  எஸ்யுசிஐ கம்யூ.க்கு அமமுகவில் 2 இடங்கள்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலச்செயலர் சந்திரமோகன் கூறியதாவது:

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, எஸ்யுசிஐ (சுசி) கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்று புதிய கூட்டணி அமைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.இந்நிலையில் முதல் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். அதில் 17 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கூட்டணிக் கட்சியான எஸ்யுசிஐ (சுசி) கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அனைவரும் மக்கள் நீதி மய்யம் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள்.

திருபுவனை - ரமேஷ், வில்லியனூர்- பானுமதி, உழவர்கரை- பழனிவேலன், கதிர்காமம்- சதானந்தம், இந்திரா நகர்- சக்திவேல், தட்டாஞ்சாவடி- ராஜேந்திரன், லாஸ்பேட்டை- சத்தியமூர்த்தி, காலாப்பட்டு - சந்திர மோகன், ராஜ்பவன்- பர்வதவர்தினி, உப்பளம்- சந்தோஷ்குமார், உருளையன்பேட்- சக்திவேல், நெல்லித்தோப்பு- முருகேசன், அரியாங்குப்பம்- ருத்ரகுமார், ஏம்பலம்- சோம்நாத்,நெட்டபாக்கம்- ஞானஒளி, நெடுங்காடு- நரசிம்மன். முதலியார்பேட் -அரி கிருஷ்ணன், இவர்கள் 17 பேரும் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள். காமராஜ் நகர் - லெனின் மட்டும் சுசி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் இக்கட்சிக்கு காமராஜ் நகர், முத்தியால்பேட் ஆகிய தொகுதிகள் தரப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் காமராஜர் நகர் வேட்பாளர் இடம் பெற்றுள்ளார். அடுத்த பட்டியலில் முத்தியால்பேட்டை வேட்பாளர் இடம் பெறுவார். கட்சித்தலைவர் கமலஹாசன்புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in