புதுச்சேரி தனியார் அப்பார்ட்மெண்டில் - ரூ.6.45 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் மாயம் :
புதுச்சேரி வாழைக்குளம் பாப்பம்மாள் கோயில் தெருவைச் சேர்ந் தவர் பிரைன் சித்தார்த்த இன்கிள் (56). வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட வியாபாரியான இவர் 10 வருடங்களாக புதுச்சேரியில் தங்கி வெளிநாட்டு கரன்சிகளை மாற்றிக் கொடுக்கும் பணிகளை செய்து வந்தார்.
இதற்காக வைத்திக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட் மெண்டில் அவர் தங்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் லாக்கரில் இருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சமீபத்தில் எண்ணியுள்ளார். அப்போது வெளிநாட்டு கரன்சிகள் 500, 200, 100, 20 (யூரோ டாலர், சுவீஸ்) என மொத்தம் 70 நோட்டுகள் வரை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவற்றின் மொத்த இந்திய மதிப்பு ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 516 எனகூறப்படுகிறது. இதுபற்றி தனதுவீட்டில் பணியாற்றிய வேலைக்கார பெண்ணிடம் விசாரித்த நிலையில், அவரை வேலையிலி ருந்து நீக்கினார்.
இதுகுறித்து முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் பிரைன் சித்தார்த்த இன்கிள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
