திண்டுக்கல் தொகுதியின் அதிமுக வேட்பாளர் - அமைச்சர் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் :

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.
Updated on
1 min read

திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் தொகுதியில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 2-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் நேற்று பிற்பகல் வேட்புமனுவை கோட்டாட்சியரும் திண்டுக்கல் தொகுதி தேர்தல் அலுவலருமான காசிசெல்வியிடம் தாக்கல்செய்தார். முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பிரேம்குமார் ஆகிய இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பிறகு திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறுகையில், "கடந்தமுறை வாங்கி யதைவிட 4 மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் பணிகள் செய்துள்ளேன். அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களும் வெற் றியை உறுதிசெய்யும்" என்றார்.

ஆத்தூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in