

தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜா, கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் ரம்யா (11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு ரம்யா அந்த பகுதி சிறுமியருடன் சேர்ந்து அங்குள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார்.
கோயிலை அவர் சுற்றி வந்த போது, டிரான்ஸ்பார்மரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் அவரது ஆடை சிக்கியது. இதை எடுக்க முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.