

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சேர்வலாறு- 2, மணிமுத்தாறு- 9, கொடுமுடியாறு- 3, நம்பியாறு- 3, சேரன்மகாதேவி- 2, பாளையங்கோட்டை- 6, திருநெல்வேலி- 1.
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்): பாபநாசம்- 114.95 (143), சேர்வலாறு- 126.84 (156), மணிமுத்தாறு- 103 (118), வடக்கு பச்சையாறு- 45.05 (50), நம்பியாறு- 13.28 (22.96), கொடுமுடியாறு- 13.50 (52.50).
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 197 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 455 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி
திடீர் மழையால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. கோடையிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி யுடன் குளித்தனர். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. கடனா நதி அணை நீர்மட்டம் 75.90 அடியாகவும், ராம நதி அணை நீர்மட்டம் 71.75 அடியாகவும் இருந்தது.