தேர்தல் பணியில் 9,043 அலுவலர்கள் : தென்காசியில் சுழற்சி முறையில் தேர்வு

தேர்தல் பணியில் 9,043 அலுவலர்கள்  :  தென்காசியில் சுழற்சி முறையில் தேர்வு
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9,043 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.

பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு தென்காசி தொகுதிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும், சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கு சங்கரன்கோவில்  கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி க்கு புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் தொகுதிக்கு ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் தொகுதிக்கு அத்தியூத்தில் உள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் வருகிற 16-ம் தேதி காலை 10 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புக்கான ஆணை சம்பந்தப்பட்ட அலுவலர் கள் மூலம் அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்கான ஆணை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துகொண்டு, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என, தென்காசி ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in