தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு :

தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு  :
Updated on
1 min read

ஆரணி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ்(32). இவர், சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதனால், இவரது மனைவி தேவி தனது மகன்களான கமலேஷ்(2), லோகேஷ் ஆகியோருடன் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிய கமலேஷ், தண்ணீர் தொட்டியில் விழுந்து மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, உறவினர்கள் சிறுவனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே கமலேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in