

வானூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 1.75 லட்சம் பறி முதல் செய்தனர்.
வானூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் தொள்ளமூர் பகுதியில் நேற்று வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் வந்த தொள்ளமூரைச் சேர்ந்த செல்வம் (35) என்பவர் ரூ.1,75,500 கொண்டு செல்வது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து வானூர் கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படைஅலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்டுசாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினி லாரியை ஓட்டி வந்த மதுராந்தகத்தை சேர்ந்த மோகன்ராஜ் (24) என்பவரிடம் ரூ.1,32,050 இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து வானூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.