Regional02
குண்டர் சட்டத்தில் 5 பேர் அடைப்பு :
ஆறுமுகநேரி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த காயல்பட்டினம் மன்னர் ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (32) என்பவரை திருச்செந்தூர் போலீஸார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் உடன்குடி தேரியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் கஞ்சா விற்ற அதேஊர்வடக்குத் தெருவைச் சேர்ந்தசரத்குமார் (27) என்பவரை குலசேகரன்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம்இருந்து 1.750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனைமற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக73 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சம்பந்தமாக5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
