

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை களை, தபால் ஊழியர்கள் மூலம் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 45,128 பேருக்கு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றை தபால்துறை மூலம் விநியோகிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ண மூர்த்தி, பிரதீக்தயாள், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலட்சுமி, திருநெல்வேலி தபால்துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் ரகுநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிப்பது தொடர்பாக, பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடன் ஆட்சியர் ஆலோ சனை மேற்கொண்டார்.
தென்காசி
மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, கோட்டாட்சியர் நா.ராமசந்திரன் உடனிருந்தனர்.