

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ங்களில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பரவலாக கோடை மழை பெய்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங் களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 10, சேர்வலாறு- 8, கொடுமுடியாறு- 25, அம்பாசமுத்திரம்- 2, சேரன்மகாதேவி- 17.20, கடனா- 4, ராமநதி- 10, கருப்பாநதி- 12, குண்டாறு- 3, அடவிநயினார்- 27, ஆய்க்குடி- 52.4, சங்கரன்கோவில்- 18, தென்காசி- 74, செங்கோட்டை- 7, சிவகிரி- 91.
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 115.15 (143), சேர்வலாறு- 127.03 (156), மணிமுத்தாறு- 103.25 (118), வடக்கு பச்சையாறு- 45.10 (50), நம்பியாறு- 13.28 (22.96), கொடுமுடியாறு- 13.75 (52.50), கடனா- 76.10 (85), ராமநதி- 72 (84), கருப்பாநதி- 57.25 (72), குண்டாறு- 34.12 (36.10), அடவிநயினார்- 55.50 (132.22).
பாபநாசம் அணைக்கு 268 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையி லிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 88 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 455 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
குற்றாலத்தில் நேற்றுமுன் தினம் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. நேற்று காலையில் நீர்வரத்து குறைந்ததால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.