வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு :
வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் டாடா நிறுவனம் சார்பில் முதல் நிலை வளாகத் தேர்வு நடத்தப்பட்டது.
வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் என்டிடிஎப் மூலமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கான வளாகத் தேர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி துணைத் தலைவர் ஜனார்தனன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் ரமேஷ் முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார்.
வளாகத் தேர்வில் என்டிடிஎப் உதவி மேலாளர்கள் அருண்பிரகாஷ், தினகரன், முதுநிலை பயிற்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், ஆசிப், பயிற்சி அலுவலர்கள் காளீஸ்வரன், சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர். ஓசூரில் தொடங்க உள்ள இந்த நிறுவனத்தில் சுமார் 18 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர். நிறுவனம் சார்பில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து விளக்கப்பட்டது. வளாகத் தேர்வில் 253 பேர் பங்கேற்றனர். இவர் களுக்கு முதல் நிலை தேர்வாக உயரம், எடை மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.
