

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 331 அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத்தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவை ஏற்கெனவே அகற்றப்பட்டன. இந்நிலையில், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தளி சட்டப்பேரவைத் தொகுதிகளில் விதிமுறைகளை மீறி எழுதப்பட்டிருந்த 50 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதே போல் கட்சி போஸ்டர்கள், பேனர்கள் உட்பட 331 அரசியல்கட்சி விளம்பரங்கள் அகற்றப் பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலு வலர்கள் தெரிவித்தனர்.