உளுந்தூர்பேட்டையில் ரூ.2.8 லட்சம் பறிமுதல் :

உளுந்தூர்பேட்டையில் ரூ.2.8 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை சேலம் சாலை யில் தேர்தல் பறக்கும் படைஅலுவலர் சீனுவாசன் தலைமை யிலான அலுவலர்கள் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். ஓட்டுநர் செந்திலிடம் உரிய ஆவணமின்றி ரூ. 2 லட்சத்து 83 ஆயிரம்இருந்தது. அதனை உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் சரவண னிடம் ஒப்படைத்தனர்.

திண்டிவனம் அருகே கூட்டேரிப் பட்டில் வல்லம் ஒன்றிய கிராம வளர்ச்சி அலுவலக இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் தலை மையிலான பறக்கும் படையினர் நேற்று காலை அந்த வழியாக பைக்கில் வந்த திண்டிவனம் அருகே வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (35)என்பவரை சோதனை செய்தனர். உரிய ஆவணமின்றி அவர் ரூ. 1,28,240 கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in