கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள - நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தல் :

கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள  -  நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தல் :
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட் டுள்ள நெல் மூட்டைகளை உடனடி யாக இயக்கம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநி லச் செயலாளர் சி.சந்திரகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குறிப்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. இந்த மூட்டை களில் எடையிழப்பு ஏற்பட்டால், அதற்கு கொள்முதல் பணியாளர் களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற நடவடிக்கை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், டெல்டா மாவட்டங் களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், திறந்தவெளி யில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைய நேரிடும். இதற்கும் பணியாளர்கள்தான் பொறுப் பேற்க வேண்டும். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனடி யாக இயக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in