சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் - நாளை முதல் 8 இடங்களில் வேட்பு மனு தாக்கல் : வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம்.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம்.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை 8 இடங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்பு மனு தாக்கல் நாளை (12-ம் தேதி) முதல் வரும் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட வேண் டும். விடுமுறை நாளான 13 மற்றும் 14-ம் தேதி ஆகிய 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது.

செங்கம் (தனி)

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கலசப்பாக்கம்

போளூர்

ஆரணி

செய்யாறு

வந்தவாசி (தனி)

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை வரும் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெற வேண்டும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in