தி.மலை மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு - வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு :

தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் இருந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 10,13,774 ஆண்கள், 10,55,220 பெண்கள், 97 மூன்றாம் பாலினத்தவர்கள் என 20,69,091 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வாக்களிப்பதற்காக 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை அடிப்படையில், 20 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங் களும், 31 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக, 3,465 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,465 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,783 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்களை, சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்புவதற்காக, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10,713 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப் பட்டன.

இதையடுத்து, வாக்குச்சாவடி கிடங்கில் இருந்த இயந்திரங்களை பிரித்தெடுக்கும் பணி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதனை அவர்கள், காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in