திருப்பூரில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான - வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு :

திருப்பூரில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான -  வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் தெற்கு, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கண்ட 8 தொகுதிகளிலுள்ள 3343 வாக்குசாவடிகளுக்கு 4015 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4015 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4350 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று அனுப்பிவைத்தார். வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in