திருச்செந்தூர் கோயில் மூலவருக்கு - ரூ.55 லட்சம் மதிப்பில் தங்க கிரீடம் : ஈரோடு பக்தர் உபயமாக வழங்கினார்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் உபயமாக வழங்கிய 1,350 கிராம் எடையுள்ள தங்க கிரீடம்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் உபயமாக வழங்கிய 1,350 கிராம் எடையுள்ள தங்க கிரீடம்.
Updated on
1 min read

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1,350 கிராம் எடை கொண்ட சிவப்புக் கல் பதித்த தங்க கிரீடத்தை உபயமாக வழங்கினார்.

ஈரோட்டைச் சேர்ந்த முருக பக்தர் தினேஷ் கிருஷ்ணன். இவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவருக்கு தங்க கிரீடம் உபயமாக செலுத்துவதாக வேண்டியிருந்தனர். இதற்காக நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த அவர்களை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

பின்னர் உள்துறை அலுவலகத்தில் வைத்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள 1,350 கிராம் எடை கொண்ட தங்கக் கிரீடத்தை மூலவருக்கு அணிவிப்பதற்காக கோயில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரனிடம், தினேஷ் கிருஷ்ணன் குடும்பத்தினர் வழங்கினர். அப்போது, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in