தி.மலை நகராட்சி அலுவலகம் முன்பு - குடும்பத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா :

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலா ளர்கள், குடும்பத்துடன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி யில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப்பணிகள் மேற்கொள் ளப்படுகிறது. அதில், ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த மலர்வண்ணன், சங்கர் கணேஷ் மற்றும் விநாயகம் ஆகியோர் பணிக்கு சரியாக வருவதில்லை எனக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் துப்புரவுத் தொழிலாளர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “ஒப்பந்த தொழிலாளர்களுக்காக சங்கம் அமைத்து செயல்பட்டதால், பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் உட்பட அதிகாரி களிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணி இல்லாத காரணத்தால் சிரமப்படுகிறோம்” என்றனர். பின்னர் அவர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களிடம், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in