அறிவாலயத்துக்கு படையெடுத்த சிறிய கட்சிகள்

அறிவாலயத்துக்கு படையெடுத்த சிறிய கட்சிகள்
Updated on
1 min read

திமுக கூட்டணியில் முக்கிய அரசியல் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஏராளமான சிறிய கட்சிகள், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி நேற்று படையெடுத்த வண்ணம் இருந்தன.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகள், 1 மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐயூஎம்எல் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று மாலை நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறு கட்சிகள், சாதி கட்சிகள், அதிமுகவில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத கட்சிகள் உள்ளிட்டவை நேற்று அண்ணா அறிவாலயம் நோக்கி படையெடுத்தன. தங்கள் கட்சி கொடி வண்ணங்களைக் கொண்ட துண்டுகள் மற்றும் சால்வைகளை கட்சியினர் தங்கள் தோள்களில் அணிந்து வந்து சென்றபடி இருந்ததால், அண்ணா அறிவாலய வாயில் நேற்று வண்ணத் துண்டுகளாக காட்சியளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in