பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி போட்டி?

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி போட்டி?
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி தொடர்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்த பேச்சு நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும். கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி எம்பியாக இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பென்னாகரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். 1996 மற்றும் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, தொகுதிகளின் பட்டியல் வெளியானதும் முடிவு செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in