

ஆத்தூர் அடுத்த ஏத்தாப்பூர் பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் செல்வமணி (25). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் சேலத்தில் பெண் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்.
இதையடுத்து, தனது நண்பர்கள் மணி மற்றும் விஜய் ஆகியோருடன் மது அருந்திய செல்வமணி பாப்பநாயக்கன்பட்டி அணையில் குளிக்கச் சென்றனர். அப்போது, செல்வமணி மாயமானார். தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடியபோது சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.