

கோபியில் வருவாய்த் துறை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோா் கலந்து கொண்டனர். கோபி கோட்டாட்சியர் பழனிதேவி போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கச்சேரிமேடு அரசு உதவிபெறும் பள்ளியில் தொடங்கி காவல்நிலையம், நீதிமன்ற வளாகம், ல.கள்ளிப்பட்டி வழியாக நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டி நிறைவடைந்தது.
இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்கவேண்டும். வலிமையான மக்களாட்சியை உருவாக்கவேண்டும் உள்ளிட்டவை மாரத்தான் போட்டியின்போது வலியுறுத்தப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.