போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி: வருவாய் அலுவலர் விருப்பம் :

போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி: வருவாய் அலுவலர் விருப்பம்  :
Updated on
1 min read

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா தென்காசி வ.உ.சி. வட்டார நூலக வளர்ச்சிக்கு ரூ.1000 செலுத்தி238-வது புரவலராக இணைந்தார். நூலகம்மூலம் பயிற்சி பெற்று, கடின உழைப்பால் உயர் பதவிக்கு வந்ததாக கூறிய அவர்,தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் நூலகத்துக்கு வந்து நூலகத்தில் பயிற்சி பெறும் போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சியளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இதேபோல், தென்காசி நூலகம் மூலம்போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை வருவாய் ஆய்வாளர் கஸ்தூரி, 239-வது புரவலராக இணைந்தார்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் சங்கரன், ஆய்வாளர் கணேசன், வட்டார நூலகர் பிரமநாயகம், கிளை நூலகர் சுந்தர், வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகேசன், குழந்தைஜேசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in