தூத்துக்குடி மாவட்டத்தில் தொகுதி வாரியாக - வாக்கு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு :

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி  செந்தில் ராஜ்  தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட  கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 			      படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில் ராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுழற்சி முறையில் இவற்றைஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாகவும், விவிபாட் இயந்திரங்கள் 30 சதவீதம் கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டதும், இந்த இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் கொண்ட வாக்குச்சீட்டுகள் பொருத்தப்படும்.

பின்னர் மீண்டும் சுழற்சி அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் பட்டியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஒருங்கிணைப்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்

மாவட்ட தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in