

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள முப்புடாதி அம்மன்கல்வியியல் கல்லூரியில் உலகமகளிர் தின விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாணவி பெல்சிட்டா வரவேற்றார். மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். ஆசிரியர் சுதா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் பிரீத்தி, வனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.கல்லூரியின் உதவி முதல்வர் சரளா ராமச்சந்திரன், பேராசிரியர்கள் தமிழரசு, ராஜேஸ்வரி, சுமிதா,சுஜிதா, லுமினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவி அபியா சுவிட்லின் நன்றி கூறினார்.