தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி - தூத்துக்குடி பள்ளி மாணவர் சாதனை :

தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர் ராம் சுதிக்கை தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர் ராம் சுதிக்கை தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Updated on
1 min read

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ராம் சுதிக் சிறு வயதில் இருந்தே சிலம்பாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்ற ராம் சுதிக் தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றியும், ஒரு மணி நேரம் சுருள் வாள் சுற்றியும் சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவனுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய தாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ராம் சுதிக்கை பாராட்டி பரிசு வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in