முதியவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஏற்பாடு : விருதுநகர் திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அருகில் மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.
திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அருகில் மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திமுகவினரை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டனர்.

விருதுநகரில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர்.

தனுஷ் குமார் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் பேசியதாவது:

திருச்சியில் இன்று நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களை அறிவிக்கிறார். இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் கிராமங்களில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிக்காமல் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in