தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு - வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு :

வாக்குப்பதிவு  இயந்திரங்களை  கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை தென்காசி ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை தென்காசி ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களில் தேர்தலுக்கு பயன்படுத்த தேவை யான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்து, 5 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தென்காசி ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் அப்துல் காதர், தேர்தல் வட்டாட்சியர் சண்முகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திர ங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அவசர தேவைக்காக கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திர ங்கள், 20 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீத விவி பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவை சங்கரன்கோவில், வாசு தேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங் களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in