

தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 04151-224155,224156,224158 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4253 169 மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலாஅறிவித்துள்ளார்.