ரயில் முன் பாய்ந்து பல்கலை உதவி பதிவாளர் தற்கொலை :

ரயில் முன் பாய்ந்து  பல்கலை உதவி பதிவாளர் தற்கொலை :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் (வளர்ச்சி) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கல் அருகே உள்ள சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் அடைக்கலம்(58). இவர் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே நேற்று நின்றிருந்தார். அப்போது ரயில் வந்ததும் திடீரென அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in