குறிஞ்சிப்பாடி அருகே - குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு :

குறிஞ்சிப்பாடி அருகே -  குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வேணு கோபால சுவாமி தீர்த்த குளம் அமைந்துள்ளது. இப்பகுதி மக் கள் மற்றும் சிறுவர்கள் இந்தக் குளத்தில் குளிப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று வெங்கடாம்பேட்டை கிழக்கு தெருவைசேர்ந்த சிங்காரவேல் மகன் ராம் குமார் (15), அதே தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் புஷ்பராஜ் (15) ஆகிய இருவரும் நண்பர்களோடு விளையாடி விட்டு, தீர்த்த குளத்தில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதியில் சிக்கினர்.

குளக்கரையில் இருந்து இதைப்பார்த்தவர்கள், ஊருக்குள் சென்று தகவல் தர, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டு, தீய ணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியோடு இரு சிறுவர்களையும் மீட்டனர். அதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய புஷ்பராஜை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென் றனர். செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ராம்குமார் குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம்வகுப்பும், புஷ்பராஜ் வெங்ககடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in