மாற்றுத்திறனாளி, முதியோர் : தபால் வாக்கு படிவம் பெற 12-ம் தேதி கடைசிநாள் :

மாற்றுத்திறனாளி, முதியோர் : தபால் வாக்கு படிவம் பெற  12-ம் தேதி கடைசிநாள்  :
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலின்போது 80-வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:

முதியோர், மாற்றுத்திறனாளி கள் மற்றும் கரோனா பாதிப்புள்ள வாக்காளர்கள் 12 டி படிவத்தை வரும் 12-ம் தேதிக்குள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து வைத்திருந்தால், வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள்.

மாற்றுத்திறனாளிகள் அதற்கான தகுந்த அரசு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும். கரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர், சம்பந்தப்பட்ட அனைத்துப் படிவங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று பூர்த்தி செய்த ‘12டி’ படிவங்களை சரிபார்த்து, தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in