

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தமிழகசட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்களை சிறப்புகாவலர்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்குஉடல் திடகாத்திரம் உள்ள மற்றும்விருப்பம் உள்ள 65 வயதுக்குஉட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விருப்ப விண்ணப்பம் சமர்பிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படியான ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.