

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு வேலூர் கொணவட்டம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து பள்ளி கொண்டா நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை யிட்டனர்.
அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப் பட்ட 8 குக்கர், 8 தோசை தவா, 8 ஜூஸ் மிக்ஸர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் குழுவினர் அவற்றை வேலூர் வட்டாட்சியர் வசம் ஒப்படைத்தனர்.